வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் - அது
வேதன் விதியென்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான
Wednesday, July 14, 2010
வந்த நாள் முதல் இந்த நாள் வரை - கவியரசு கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment