இணையத்தை தேடும் போது, இதுவும் வதந்தி அடிப்படையில் வந்த செய்தியாகவே தோன்றுகின்றது. குறித்த நாட்டில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கும் 1% இற்கும் குறைவான முஸ்லிம் சமூகத்துக்கும் இடையில் முறுகல் நிலை உள்ளது என்பது உண்மையே. ஆனால் இப்படி ஒரு முடிவை தமது அரசாங்கம் எடுக்காது என்றும், தமக்கு அப்படி ஒன்றை அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டு உயர்ஸ்தானிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அநேக சமூக வலைதளங்களில் இந்த செய்தியுடன் பரப்பப்பட்ட பள்ளி ஒன்று இடிந்து விழுவது 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது என்று International Business Times கருத்து தெரிவித்துள்ளது. ஒரு செய்தி "அங்கு சொல்கிறார்கள், இங்கு சொல்கிறார்கள்" என்று துவங்கினால், அது ஒரு வதந்திகான முழு தகைமைகளையும் கொண்டது எனலாம்.
பொறுப்புள்ள முஸ்லிம் சமூகம் என்கிற வகையில் சில "பரபரப்பான" செய்திகளை ஆர்வத்துடன் பதிவிடுவதற்கு முன்பு, குறித்த செய்தி "பரபரப்பாக" பேசப்படுவதற்கான காரணம் என்ன என்பவற்றை ஆராய்ந்து பதிவிட்டால் "வதந்தி" பரப்பிய பாவத்திலிருந்து நாமும் விடுபடலாம்.
IBL இன் முழு செய்தி இதோ: